பரலோகநீதிமன்றத்தில்மேல்முறையீடுகளைவழங்குதல் –
- மேல்முறையீட்டாளரின் பெயர் : தமிழ்நாடு AOJ வீரர்கள் மற்றும் TN கோர் குழு
- மனு தேதி : 15.10.2022
- பொருள் : மக்களிடையே காணப்படும் மோசமான சாலை போக்குவரத்து ஒழுக்கம்
- எதிராளி : சாலை போக்குவரத்து முறமைகளை ஆள முற்படும் துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும்
- மனு : சாலை போக்குவரத்து சீரமைப்பு
- மனுவின் பயனாளிகளின் எண்ணிக்கை : 141 கோடி மக்கள்
- தீர்ப்பு கோரியது : சாலை போக்குவரத்து சீரமைப்பு , மக்கள் சாலை போக்குவரத்து ஒழுக்கமடைய வேண்டும், சாலை விபத்துகளை குறைத்தல், தவறான வார்த்தைப் பிரயோகம் நிறுத்தப்பட வேண்டும், சாலையில் உள்ள அங்கீகரிக்கப்படாத கட்டமைப்பு மற்றும் கோவில்கள் நீக்கப்படவேண்டும்.
- எங்கள் பரலோக பிதா, ராஜாதி ராஜா மற்றும் கர்த்தாதி கர்த்தர், வானத்தையும் பூமியையும் படைத்தவர், நித்திய நீதிபதி, உங்கள் பார்வை மற்றும் செயலுக்கான வேண்டுகோளை முன்வைக்க, தமிழ்நாட்டு அரசின் நிழல் அமைப்பாக நாங்கள் உங்கள் முன்னிலையில் வந்துள்ளோம். தயவு கூர்ந்து தமிழ்நாட்டு சபையின் விண்ணப்பத்தை ஏற்று, சாதகமாகத் தீர்ப்பளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
பிரச்சனைகள்
- சாலை பயணிகளிடையே தவறான மொழி பயன்படுத்தப்படுகிறது
- hit and run case , சாலை போக்குவரத்து விபத்துக்கள் அதிகம் நிகழ்கிறது.
- திட்டமிடப்படாத சாலை மற்றும் உள்கட்டமைப்பு
- முந்திச் செல்ல மக்கள் போட்டி போடுகிறார்கள்
- அங்கீகரிக்கப்படாத உள்கட்டமைப்பு மற்றும் சாலையில் (கோவில்கள்) சட்டவிரோதமான கட்டமைப்பு
- சாலை பயணிகள் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுப்பதில்லை.
- குறுகிய சாலைகள்
- சாலை விபத்துக்கள், வாய்மொழி துஷ்பிரயோகம் மற்றும் சாலைப் பயணிகளிடையே சண்டை அதிகமாக காணப்படுகிறது.
- நகர சாலை பயணம் விரும்பத்தக்கதாக இல்லை.
- ஆர்டிஓ அலுவலகத்தில் ஊழல்
- சரியான சாலை பாதுகாப்பு கல்வி அமைப்பு இல்லை
- மன அழுத்தம் நிறைந்த சூழல்
- மனபக்குவம் இல்லாத இளைஞர்கள் பைக் வாங்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
- வாகனம் வாங்குவதற்கு வங்கியில் இருந்து தரப்படும் பொறுப்பற்ற கடன். இச்செயல் இளைஞர்களை கடனாளிகளாக மாற்றுகிறது மற்றும் சாலையில் அதிகரிக்கும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
- காற்று மற்றும் ஒலி மாசு ஏற்படுகிறது
- பொருள்,பணம், உயிர் இழப்பு அதிகமாக ஏற்படுகிறது
- போக்குவரத்து அமைப்பின் மீது சாத்தான் அதிகாரத்தை முன்வைக்கிறான்
- தமிழ்நாட்டு மக்கள் மற்றும் சபையை குற்றப்படுத்தி சாத்தான் பரலோக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைகிறான்.
- தமிழ்நாட்டு சபை மற்றும் மக்கள் சார்பாக மிகுந்த தாழ்மையுடன் நாங்கள் இந்த குற்றச்சாட்டை ஏற்றுகொள்கிறோம். நாங்கள் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கோருகிறோம்.
- இயேசு கிறிஸ்து நம் பாவங்களுக்காக மன்றாடுகிறார், அவர் தமது இரத்தத்தை நீதிபதி முன் பரிகாரமாக சமர்ப்பிக்கிறார். அவரது இரத்தத்தின் குரல் மிகவும் சக்திவாய்ந்தது, அதன் கோரிக்கையை நீதிபதி நிராகரிக்க முடியாது. இந்த மண்ணில் இரத்த சாட்சிகளாக மரித்த அப்போஸ்தலர்கள் மற்றும் ஊழியர்களின் குரல் இயேசுவோடு சாட்சி கொடுகிறார்கள். அவர்களும் இயேசுவின் குரலுடன் உடன்படுகிறார்கள். பரலோக சபை அவருடைய இரத்தத்தின் குரலுடன் உடன்படுகிறது. நாம் அனைவரும் அவருடைய இரத்தத்தின் குரலுடன் உடன்படுகிறோம். இப்போது சாத்தானின் குற்றச்சாட்டு ரத்து செய்யப்பட்டு அவன் அமைதியாகிவிட்டான். சட்டத் தடைகள் நீக்கப்பட்டு வழி சீர்செய்யப்படுகிறது.
- இப்போது நீதிபதி தீர்ப்பை வழங்குகிறார்.
- பரிசுத்த ஆவியின் உதவியுடன் சபை அமைதியாக தீர்ப்பை புரிந்துகொள்கிறது.
- கர்த்தரின் குரலைக் கேளுங்கள், தரிசனத்தைப் பெறுங்கள், வேதத்திலிருந்து ரேமா வார்த்தையைப் பெறுங்கள்.
நமக்கு சாதகமாக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு
கொலோசெயர்3 :12. ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு;13. ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.14. இவை எல்லாவற்றின்மேலும், பூரணசற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.15. தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது,
எரேமியா 50 46. பாபிலோன் பிடிபட்டதின் சத்தத்தினால் பூமி அதிரும், அதின் கூப்பிடுதல் ஜாதிகளுக்குள்ளே கேட்கப்படும்.
- பாதுகாப்பான மற்றும் அமைதியான சூழல் ஏற்படும்
- ஆர்டிஓவில் ஊழல் ஒழிக்கப்படும்
- பார்க்கிங் இடத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்
- சாலை ஒழுக்கம் மற்றும் பொறுப்பு உணர்வு ஊக்குவிக்கும் கல்வி மற்றும் பயிற்சி உருவாக்கப்படும்
- குழந்தைகள் விளையாடும் பகுதி மற்றும் நடைபாதைகள் சாலைகளுக்கு அருகில் கட்டாயமாக்கப்படும்
- ஓட்டுநர் உரிம விதிகள் கடுமையாக்கப்படும்
- வாகன விற்பனை கட்டுப்படுத்தப்படும்
தமிழ் நாட்டு சபை இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு பொறுப்பேற்போம்.
பரலோக நீதிமன்றத்தில் மேல்முறையீடுகளை வழங்குதல் – மோசமான சாலை போக்குவரத்து ஒழுக்கம் – 15.10. 22