——————(தேதி) ————– (இடம்)

  1. சட்டமன்ற தொகுதியின் பெயரில் ஒரு கோப்பை திறக்கவும்.  அனைத்து ஆவணங்களையும் அந்த கோப்பில் பாதுகாப்பாக வைக்கவும். எஸ்.எம்.எல்.ஏக்கள் தொடர்பாக நீங்கள் பங்கு கொள்ளும் அனைத்து கூட்டங்களுக்கும் இந்த கோப்பை கொண்டு வரவும். ஜெப வேளையில் கோப்புகளை கர்த்தருக்கு முன்பாக வைக்கவும். 
  2. உங்கள் சட்டமன்றத் தொகுதியின் முழுமையான கணக்கெடுப்பை மேற்கொள்ளுங்கள்.

அ. விவரங்களுடன் மக்கள் தொகை

ஆ. முக்கியமான இடங்கள்

இ. தாலுக்கா, கிராமங்கள்

ஈ. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்

உ. இடத்தின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்

ஊ. மத, சமூக, கல்வி மற்றும் புவியியல் ஈர்ப்புக்கான இடங்கள்

எ. மக்களால் பேசப்படும் மொழிகள்

ஏ. மக்களால் பின்பற்றப்படும் மதங்கள்

ஐ. மக்களின் தனிநபர் வருமானம்

ஒ. மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்டங்கள் 

ஓ. வேலை வாய்ப்புகள்

ஔ. மக்களுடைய வருமான ஆதாரம்

க. உள்கட்டமைப்பு

ங. கட்டி அழிக்க வேண்டிய சாத்தானின் அரண்கள்

      3.  உங்கள் சட்டமன்ற தொகுதியில் இயேசு கிறிஸ்துவின் அரசாங்கத்தை கொண்டு வருதல்.  அதற்காக,

            அ. ஒவ்வொரு மாதமும் எஸ்.எம்.பி யால் ஏற்பாடு செய்யப்படும் நிழல் சட்டமன்றக் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொண்டு, கொடுக்கப்பட்ட தலைப்பில் உங்கள் சட்டமன்றத் தொகுதியின் அறிக்கையை சமர்ப்பிக்கவும். 

            ஆ. உங்கள் சட்டமன்றத் தொகுதியின் பிரதிநிதியாக பரலோக சபையில் தினந்தோறும் நிற்கவும். உங்கள் தொகுதியை குறித்து ஒவ்வொரு நாளும் ஒரு அறிக்கையை பரலோகத்தில் சமப்பிக்கவும். பரலோகத்திலிருந்து உடனடி பதில்களைப் பெற்று சம்பந்தப்பட்ட நபர்களுக்குத் தெரிவிக்கவும்.

            இ. உங்கள் சட்டமன்றத் தொகுதிக்காக திசசரி தீர்க்கதரிசனம் உரைக்கவும், மேலும் தொகுதிக்குத்  தேவைப்படும் பரலோக ஆசீர்வாதங்களை கட்டவிழ்த்து ஊற்றவும். உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தையும், வல்லமையையும் பயன்படுத்தி சாத்தானின் அனைத்து கிரியைகளையும் கட்டி அழிக்கவும். (மத் 18:18, 16:19, லூக் 9:1, மாற் 16:17,18)

            ஈ. அனைத்து கடமைகளையும் நிறைவேற்றுவதில் சபாநாயகர் மற்றும் நிழல் நாடாளுமன்ற உறுப்பினருடன் சேந்து செயல்படுங்கள்.

            உ. உங்கள் சட்டமன்றத் தொகுதியில் ஒரு மாத இரவு கண்விழிப்பு பிரார்த்தனை நடத்துங்கள்.  இந்த ஜெபத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளவடிவமைப்பை பின்பற்றவும். அனைத்து தாலுகாக்கள்/ மண்டலங்கள்/ப்ளாக்குகள்.

            ஊ.  உங்களுடைய சட்டமன்றத் தொகுதியை அணி சபைகளால் நிறப்புங்கள்.

             எ. உங்களுடைய சட்டமன்றத் தொகுதியில் அனைத்து வரங்களின் பயிற்சி பள்ளிகளையும் நடத்த வழிவகை செய்யவும். 

            ஏ. உபவாசித்து ஜெபிக்க  ஒரு நாளைக்கு ஒரு நபர் வீதம் 30 பேரை உங்கள் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கவும். (ஒவ்வொரு மாதத்திற்கான ஜெப குறிப்புகள் அனுப்பபடும்0.

            ஐ. உங்கள் சட்டமன்ற தொகுதியின் ஒரு பகுதியை (தாலுகா)ஒரு மாதத்திற்கு(இரவு ஜெபத்தின் போது இருக்கலாம்) ஒரு முறை பார்வையிடவும். அனைத்து அணி சபை வீரர்களையும் சந்தித்து அவர்களை உற்ச்சாகப்படுத்தவும். 

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.